புதுச்சேரியில் இன்று 32 பேருக்கு கரோனா தொற்று: புதிதாக உயிரிழப்பு இல்லை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று புதிதாக 32 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன. 01) தெரிவித்திருப்பதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 3,068 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 16, காரைக்கால் - 3, ஏனாம் - 3, மாஹே - 10 என மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 633 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 164 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் 150 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 216 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீட்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 366 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 165 (97.38 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 4 லட்சத்து 88 ஆயிரத்து 451 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 45 ஆயிரத்து 976 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in