

விருதுநகரில் இன்று 2-ம் நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 107 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று 2ம் நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
குழுவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் காளிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அர்ஜுணன், மாநில பொருளாளர் பெருமாள், சிஐடியு மாநில பொதுச் செயலர் சுகுமாறன் உள்பட மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்துசெய்ய பிரதமர் மோடியை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்,
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேரை சூலக்கரை போலீஸார் கைதுசெய்தனர்.