

கரும்புக்கான நிலுவை தொகையை பைசல் செய்யும் வரை அக்டோபர் 20-ம் தேதி முதல் பழையசீவரத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்த விவசாயிகள் முடிவு செய் துள்ளனர்.
பழையசீவரத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ததற்கான தொகையை பைசல் செய்யாமல் கடந்த 10 மாதங்களாக இழுத்தடித்து வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். நிலுவைத் தொகையை வழங்கக்கோரி பல கட்ட போராட் டங்களும் நடத்தப்பட்டன. மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை விவசாயிகள் முறையிட்டதால் மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முகமும் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. இருப்பினும் இதற்கு எந்த பல னும் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு மின்சார வாரியம், சர்க்கரை ஆலைக்கு பாக்கி வைத்துள்ள தொகையை வழங்கினால் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என நிர்வாகம் கூறியது. பல முறை தேதி குறிப்பிட்டு அறிவித்தும் சொன்னபடி தொகை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதனால் போராட்டத்தை தீவிரப் படுத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சி புரம் மாவட்ட செயலர் நேருவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ.14 கோடி நிலுவைத் தொகையை பல தவணை தேதிகள் அறிவித்தும் இதுவரை வழங்காமல் இருந்து வருகிறது. இதனால் வங்கிகளில் வீடு மற்றும் நகைகளை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற்ற விவசாயி களால் வங்கிக் கடனை காலத் தோடு செலுத்த முடியவில்லை. அதனால் வாங்கிய கடனுக்கு அபராத வட்டியும் செலுத்த வேண் டியுள்ளது.
சில வங்கிகள் வீட்டை ஜப்தி செய்வதற்காக வும், நகைகளை ஏலம் விடுவதற் காகவும் விவசாயிகளுக்கு நோட் டீஸ் அனுப்பி வருகின்றன. அத னால் விவசாயிகள் கடும் நெருக் கடிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்த தனியார் சர்க்கரை ஆலை சிறப்பு அரவை மற்றும் அடுத்த அரவைக்கான எந்த பணிகளையும் மேற்கொள்ள வில்லை என தெரிகிறது.
எனவே வங்கிகள் விவசாயி களுக்கு நோட்டீஸ் அனுப்பு வதை நிறுத்த வேண்டும். பழைய சீவரத்தில் உள்ள தனியார் சர்க் கரை ஆலைக்கு வழங்கப்பட்ட சேவை பகுதியை மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மாற்ற வேண்டும். சிறப்பு அர வைக்கான கரும்பை திருத்தணி சர்க்கரை ஆலைக்கும், வழக்க மான அரவைக்கான கரும்பை மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வருகி றோம்.
மேலும், நிலுவைத் தொகையை 15 சதவீதம் வட்டியுடன் வழங்கும் வரை, சர்க்கரை ஆலை முன்பு அக்டோபர் 20-ம் தேதி முதல் காத்திருக்கும் போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த போராட் டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ டில்லிபாபு தலைமை தாங்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.