

தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வெளியிட்ட அறிக்கை: எங்களது கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த 27-ம் தேதி, ‘அஸ்வமேத’ யாகம் நடத்தப் பட்டது. இந்த யாக குதிரையை தடுத்து நிறுத்த அரசோ, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோ, சட்டப்பேரவை உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, முன்னணி நடிக, நடிகைகளோ முன்வரவில்லை.
இதன்மூலம் தமிழ்நாடு கள் இயக்கத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கள் இறக்குவதும், பருகுவதும் சட்டப்படி குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை என்பதை உறுதி செய்கிறது.
இதனால், வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கப்படும். உலகளாவிய வர்த்தகம் நடைமுறையில் உள்ள காரணத்தால் இறக்கப்படும் கள் உள்நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.