

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை செய்து, பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டுக்கு வரும் முன்பு 2008- 2012ம் ஆண்டு வரை நடைபெற்ற பணப் பரிமாற்றம், பணி நியமனம் மருத்துவக் கல்விக்கான சேர்க்கை உட்பட பல்வேறு முறைகேடுகள் சம்பந்தமாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மீண்டும் சென்னையில் இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிப் பிரிவு அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பழைய ஆவணங்களை கேட்டுப் பெற்று விசாரணை நடத்திச் சென்றனர்.