உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா- 50% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா- 50% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை
Updated on
1 min read

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு, அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் தொடர்பான நூல்கள், அகராதி, அரிய நூல்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

டிசம்பர் முதல் ஜனவரி வரை வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளலாம். இணையவழியிலும் கட்டணம் செலுத்தி நூல்களைப் பெறலாம்.

தமிழ் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தள்ளுபடி விற்பனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கூடுதல் விவரங்களுக்கு 044-22542992, 22540087 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in