வரி ஏய்ப்பு விவகாரம்: மும்பை தொழிலதிபரின் பண்ருட்டி வீட்டில் வருமானவரித் துறை சோதனை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ராம்பிரசாத்தின் தந்தை சுகிசந்திரன் வசிக்கும் பண்ருட்டி வீட்டில் 9 பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் நேற்று இரவு முதல் சோதனை நடத்திவருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் ராம்பிரசாத் என்பவரின் மகன் மும்பையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவரது தொழில் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்ததாகவும், மென்பொருள் நிறுவனத்தைப் பயன்படுத்தி ரூ.3,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ராம்பிரசாத் தலைமறைவானதால், அவரை தேடிவரும் வருமானவரித் துறையினர், நேற்று (நவ. 27) இரவு பண்ருட்டியை அடுத்த முத்துக்கிருஷ்ணாபுரத்திற்கு 9 பேர் கொண்ட குழுவினர் சென்று, அங்கு வசிக்கும் தந்தை சுகிசந்திரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுதவிர ராம்பிரசாத் தொழிலதிபர் சேகர்ரெட்டியின் நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in