

புதுச்சேரியில் இன்று புதிதாக 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுவரை 3.87 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ. 24) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 4,236 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 20 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 24 பேருக்கும் என மொத்தம் 52 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 609 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவுமே உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 228 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 311 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 539 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 39 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 621 (96.88 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 87 ஆயிரத்து 618 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 46 ஆயிரத்து 460 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது".
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.