ராஜபாளையம் அருகே தொழிற்சங்க அலுவலகத்தை பூட்டி ஆக்கிரமிப்பு: முன்னாள் திமுக ஒன்றியச் செயலர் மீது புகார்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே ஆலங்குளத்தில் திமுக தொழிற்சங்க அலுவலகத்தைப் பூட்டி ஆக்கிர மித்துள்ளதாக, திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளத்தில் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை அருகே, திமுக தொழிற்சங்கக் (எல்.பி.எப்.) கட்டிடம் உள்ளது. இதில் உள்ள 3 அறைகளை முன்னாள் திமுக ஒன்றியச் செயலர் பூட்டி வைத்து ஆக்கிரமித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஞானகுரு, பொதுச் செயலர் பாலுச்சாமி, பொருளாளர் கண்ணன், முன்னாள் பொதுச்செயலர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் ஆலங்குளம் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், ஆலங்குளம் முக்கு ரோட்டில் உள்ள திமுக தொழிற்சங்கக் கட்டிடத்தின் கீழ்பகுதியில் மருத்துவமனை இயங்கி வருகிறது. மற்றொரு அறை மதிமுக பிரமுகருக்கு வாடகைக்கு விடப் பட்டுள்ளது. நடுவில் உள்ள அறை தொழிற்சங்க அலுவலக மாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த அறையில் தொழிற்சங்க ஆவணங்கள், ரொக்கம் ரூ.6 ஆயிரம், தொழிற்சங்கப் பதிவுகள், வருடாந்திர தணிக்கை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் உள்ளன.

இந்நிலையில், அந்த அலு வலக அறையை எங்களுக்குத் தெரியாமல் வேறு பூட்டை வைத்து பூட்டி, டி.கரிசல்குளத்தைச் சேர்ந்த வெம்பக்கோட்டை முன்னாள் திமுக ஒன்றியச் செயலர் பெரியாண்டவர் என்பவர் எங்களிடம் சாவியைக் கொடுக்க மறுத்து வருகிறார்.

மேலும், அங்கு சட்ட விரோதச் செயல்களும் நடந்து வருகின்றன. மதுவும் விற்கப் படுகிறது. இந்தக் கட்டிடத்தில் அசம்பாவிதம், உயிரிழப்பு சம்பவங்கள் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல. இதுகுறித்து கேட்டால் பெரியாண்டவர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எனவே, ஆக்கிரமிப்பு செய் துள்ள அலுவலகத்தை மீட்டு அலுவலகச் சாவியை பெற்றுத் தந்து, பெரியாண்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ராஜபாளையம் டி.எஸ்.பி. அலுவலகத்திலும் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in