இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்: தமிழகத்தில் 7 லட்சம் லாரிகள் இயங்காது - தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்: தமிழகத்தில் 7 லட்சம் லாரிகள் இயங்காது - தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
Updated on
2 min read

‘லாரி வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் 7 லட்சம் சரக்கு லாரிகள் இயங்காது. அதனால் நாளொன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு ரூ. 10.50 கோடியும், தமிழக அரசுக்கு ரூ.200 கோடியும் வருவாய் இழப்பு ஏற்படும்’ என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்ல தம்பி தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் உள்ள டோல்கேட் மையங்களில் சுங்கம் வசூலிப்பதை தவிர்த்து டோல்கேட் டுகளை அகற்ற வேண்டும். அதற்குப் பதில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க வரிவசூல் செய்யும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 1-ம் தேதி முதல் நாடு தழுவிய லாரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் அறிவித்தது.

அதுதொடர்பாக நேற்று புது டெல்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச் சர் நிதின் கட்கரியுடன், மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதையடுத்து திட்ட மிட்டபடி நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட் டம் தொடங்கியுள்ளது. போராட் டத்துக்கு லாரி புக்கிங் ஏஜெண்ட், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங் களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லதம்பி கூறும் போது, ‘‘சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற பிரதான கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட் டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சரக்கு லாரிகள், மணல் லாரிகள் என மொத்தம் 2,93,767 லாரிகள் உள்ளன. 89,438 வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் உள்ளன. 7,431 டிரெய்லர் லாரிகள் உள்ளன. இதுதவிர 2,77,770 சிறிய வகை சரக்கு வாகனங்கள் என மொத் தம் சுமார் 7 லட்சம் லாரிகள் இயங்குகின்றன. இந்த வாகனங் கள் அனைத்தும் இன்று காலை 6 மணி முதல் இயங்காது.

இந்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் உள்ள சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10.50 கோடியும், தமிழக அரசுக்கு ரூ.200 கோடி அளவுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும்.

மாநிலத்தின் உள்ளேயே இயங் கும் லாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், அண்டை மாநிலங் களுக்கு இயக்கப்படும் லாரி களுக்கு ரூ.25 ஆயிரம் நாடு முழுவதும் இயங்கும் லாரி களுக்கு ரூ.35 ஆயிரம் சுங்க கட்டணம் நிர்ணயம் செய்தால் ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கும். லாரி உரிமையாளர்களின் இந்த திட்டத்தை மத்திய அரசு ஏற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in