தமிழகம் முழுவதும் 274 பேர் தேர்வு: மதுரை டிஎஸ்பி, ஆய்வாளர்களுக்கு சிறந்த பணிக்கான மத்திய அரசு விருது 

தமிழகம் முழுவதும் 274 பேர் தேர்வு: மதுரை டிஎஸ்பி, ஆய்வாளர்களுக்கு சிறந்த பணிக்கான மத்திய அரசு விருது 
Updated on
1 min read

தமிழகத்தில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாகப் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என, 274 பேருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படுகிறது.

மத்திய படையான சிஎஸ்எப், சிஆர்பிஎப் போன்ற படை பிரிவினருக்கு மட்டுமே சிறந்த பணிக்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ‘உத்கிருஷ்ட சேவா படக்’ என்ற விருது வழங்கப்படுகிறது.

முதன்மை முறையாக தமிழக காவல் துறையிலும் சிறந்த பணிக்கான இவ்விருது வழங்கவேண்டும் என, பிரதமரின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, தமிழகத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் உட்படாமல் 18 மற்றும் 25 ஆண்டுகள் சிறந்த புலனாய்வு, பணியில் ஈடுபாடு, அர்ப்பணிபோடு பணியாற்றிய 2 காவல் கண்காணிப்பாளர், 20 டிஎஸ்பிகள், 40 காவல் ஆய்வாளர்கள், காவலர் கள் என, 274 பேருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

ஹேமமாலா, திருமலைக்குமார்

18 ஆண்டு பணி நிறைவு செய்து விருதுப் பட்டியல் இடம் பெற்றவர்களுக்கு ‘ உத்கிருஷ்ட சேவா படக்’ விருதும், 25 ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்ற காவல்துறையினருக்கு ‘ அதி- உத்கிருஷ்ட சேவா படக்’ விருதும் என, இருவகையில் வழங்கப்படுகிறது.

மதுரை நகர் போக்குவரத்து உதவி ஆணையர் திருமலைக்குமார், நகர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், ஆள் கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமா மாலா, சமயநல்லூர் காவல் ஆய்வாளர் கண்ணன், திண்டுக்கம் மாவட்ட உளவுப்பிரிவு (எஸ்பிசிஐடி) காவல் ஆய் வாளர் முத்துலட்சுமி உள்ளிட்டோரும் மத்திய அரசு விருது பட்டியல் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் தென் மாவட்ட அளவில் விருதுப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே டிஎஸ்பி திருமலைக்குமார் மட்டுமே. விருது பெற்றவர்களுக்கு தனித்தனி மத்திய அரசு கடிதம் அனுப்பி உறுதி செய்துள்ளது.

விரைவில் அவர்களுக்கு விருது வழங்கப்படும் என, எதிர்பார்க் கப்படுகிறது. மதுரை நகரில் விருது பெற்றவர்களை காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவும், புறநகரில் விருதுக்கு தேர்வானவர்களை டிஐஜி ராஜேந்திரன், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரும் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in