

மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏது மின்றி பயன்படுத்துகிற வகையி லான வாகனம் ஒன்றை பொறியி யல் மாணவர்கள் சிலர் தயாரித்துள்ளனர். இந்த வாகனத்தை முழு மையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இன்றைக்கு ஏராளமான மாற் றுத் திறனாளிகள் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை பயன்படுத்தி வரு கின்றனர். அந்த வாகனங்களில் பெரும்பாலானவை மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவை இல்லை. சந்தைக்கு வருகிற ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளில் கூடுதலாக சில சக்கரங்களை பொருத்தி மாற்றுத் திறனாளிகளுக்காக மாற்றிவிடு வார்கள். இப்படி மாற்றப்படும் வாகனங்கள் எல்லா மாற்றுத்திற னாளிகளுக்கும் பொருத்த மானவையாக இருப்பதில்லை.
இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில், “யுனிவர்சலி அடாப் டிவ் வெஹிக்கில்” என்னும் 3 சக்கர வாகனத்தை சென்னை பூந்த மல்லியில் உள்ள லயோலா இன்ஸ் டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இறுதி ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர் கள், எஸ்.சகாய ஆரோக்ய கிளிண் டன், எஸ்.ரமேஷ், இலியாஸ் ஜோசப் ஆகிய 3 பேரும் உரு வாக்கியுள்ளனர்.
இது பற்றி மாணவர் எஸ்.ரமேஷ் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
பொறியியல் இறுதியாண்டில் பலரும் வெளியில் புராஜெக்ட்களை விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால், அதில் எங்கள் குழு வுக்கு உடன்பாடில்லை. ஏதாவது பயனுள்ள வகையில் செய்வது என்று தீர்மானித்தோம்.
மெக்கானிக்கல் துறை என்பதால் மாற்றுத் திறனாளிகளுக் கான வாகனங்களை உருவாக்கு வதுதான் புரா ஜெக்ட் என்று முடிவு செய்தோம்.
இது தொடர்பாக எங்களது கைடு குமுதாவிடம் அனுமதி பெற்றோம். பிறகு வாகனங்களை ஓட்டி வருகிற மாற்றுத்திறனாளிகளை சந்தித்து ஒரு மாத காலத்துக்கு பேசினோம். அதன்மூலம், வாகனங்களை ஓட்டுவதில் அவர்களுக்கு உள்ள சிரமங்களை அறிய முடிந்தது. மாநகரின் பரபரப்பான பகுதி களில் வண்டியை பார்க் செய்து விட்டு திரும்பவும் அதனை எடுக்க முடியவில்லை என்று பெரும் பாலானவர்கள் கூறினார்கள். ஏனென்றால், வாகனத்தை பின் னால் தள்ளுவதற்கு அவர்களால் முடியாது. இதனால் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்படு கிறார்கள்.
எனவே, ரிவர்ஸ் கியரை வைத்து வண்டியை உருவாக்கினோம். மாற்றுத்திறனாளிகள் எல்லோரும் ஒரே மாதிரி கிடையாது. சிலருக்கு கை குட்டையாக இருக்கும், சில ருக்கு கால் சிறியதாக இருக்கும். எனவே, ஹேண்டில் பாரை 3 மாதிரி யான நிலைகளில் வைக்கும்படி அமைத்துள்ளோம். தவழ்ந்து வரும் நிலையில் உள்ளவர்கள் எளிதில் இருக்கையில் அமருவதற்கு ஏற்ப, ஒரு ஹைட்ராலிக் சாதனத்தை வைத்துள்ளோம்.
தரை மட்டத்தில் அதில் அமர்ந்து பட்டனை அழுத்தினால், இருக்கை அளவுக்கு அது உயர்ந்து விடும். மேலும், திருடுபோவதை தடுக்க என்ஜின் கிராஃப்ட்டில் ஒரு பூட்டையும் அமைத்துள்ளோம். எங்களது கல்லூரி புராஜெக்ட் என்பதால் ஒரு ஸ்கூட்டர் மாடல் வண்டியின் இன்ஜினை தற்காலி கமாக பொருத்தியுள்ளோம்.
இந்த வண்டியை தயாரிக்க எங்களுக்கு இரண்டரை மாதங் கள் ஆனது. இதற்காக ரூ.30 ஆயி ரம் வரை செலவு செய்தோம். காப்புரிமைக்காகவும் விண்ணப்பித் துள்ளோம். இந்த மாதிரியை, முழுமை பெற்ற வண்டியாக கொண்டு வந்தால் மாற்றுத்திற னாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு அரசின் சமூக நலத்துறையோ அல்லது வேறு யாரோ ஸ்பான்ஸர் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.