மதுரையில் சிறப்பு எஸ்.ஐ பதவி உயர்வு தாமதம்?- புலம்பும் முதன்மைக் காவலர்கள்  

மதுரையில் சிறப்பு எஸ்.ஐ பதவி உயர்வு தாமதம்?- புலம்பும் முதன்மைக் காவலர்கள்  

Published on

தமிழக காவல்துறையில் காவலர் முதல் அதிகாரிகள் வரை குறிப்பிட்ட சில ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

பணிக்காலத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் உட்படாமல் இருந்தால் 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற முதன்மைக் காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்( (எஸ் எஸ்ஐ) பதவி உயர்வு வழங்கப்படும்.

இதன்படி,கடந்த 1995ல் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணிக்காலம் முடித்த ஏராளமான முதன்மைக்காவலர்களுக்கு சமீபத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இதையொட்டி மதுரை நகரில் 16 பேருக்கும், மதுரை புறநகரில் சுமார் 35 பேருக்கும் சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. மாவட்டத்தில் பதவி உயர்வுக்கான பட்டியலை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மதுரை சரக டிஐஜி அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தும், இன்னும் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றும், பட்டியலில் சில திருத்தம் இருப்பதாகக் கூறி தாமதப்படுத்துவதாகவும் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் காவலர்கள் புலம்புகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘‘ மதுரை நகர் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியல் நிறைவேற்றப்பட்ட நிலையில், மதுரை புறநகரில் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கான உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை.

இது பற்றி கேட்டபோது, காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பரிந் துரைத்த பட்டியலை டிஐஜி அலுவலகம் ஆய்வு செய்த போது, அதிலிருந்து சிலர் தகுதிநீக்கப்படும் சூழலில், திருத்த பட்டியல் கேட்டு, பழைய பட்டியலை எஸ்பி அலுவலகத்திற்கு திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை நிவர்த்தி செய்து, விரைந்து பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in