

புதுச்சேரியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாட்டுச் சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் கிராம பெண்கள் ஈடு பட்டுள்ளனர். இதன்மூலம் நல்ல வருவாய் ஈட்டுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகை காலங்களில் சுற்றுச் சூழலுக்கு உகந்த, ரசாயனம் தவிர்த்த இயற்கை பொருட்களைப் பயன்படுத்துமாறு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தொடங்கி, பல்வேறு அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் புதுச்சேரி கரியமாணிக்கத்தில் கிராமத்துப் பெண்கள் மாட்டு சாணத்தில் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் தயாரிக்கும் இவர்கள் நல்ல வருவாய் ஈட்டுகின்றனர். மாட்டு சாணத்தில் தயாராகும் அகல் விளக்குகள் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுதொடர்பாக அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூறுகையில், ‘‘ஒரு கிலோ மாட்டு சாணத்துடன் 200 கிராம் முல்தானி மட்டி சேர்ந்த கலவையில் 200 அகல் விளக்குகள் வரை தயாரிக்கலாம். கரோனா காலத்தில் வருமானம் இன்றி தவித்த தங்களுக்கு இந்த புதுமையான முயற்சி நல்ல பலன் கொடுத்துள்ளது. இங்கு மட்டும் 140 பெண்கள் இந்த அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட் டுள்ளோம். விளக்கு தயாரிப்புக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இதுபோன்று இனி வரும் நாட்களில் நாட்டு மாட்டு சாணத்தை பயன்படுத்தி அகர் பத்தி, விநாயகர் சிலை உள்ளிட்ட கலைப்பொருட்களை தயாரிக்க உள்ளோம்.
இதில் விளக்கு ஏற்றும்போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. கொசுக்களும், அதன் உற்பத்தியும் அழிந்துவிடும் வாய்ப்புகள் உள் ளது. இது நம்முடைய உடல் நலத்துக்கும் நல்லது. எந்த ரசாயனங்களும் கலக்காமல் மாட்டு சாணத்தில் மட்டும் தயாரிப்பதால், எந்தவித பாதிப்பும் இருக்காது. சுற்றுச்சூழல் மாசு இல்லாததால் அனைவரும் வாங்கி பயன்படுத் தலாம்.
நம் நாட்டின் பூர்வீக கால் நடைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற் காகவும், சீன விளக்குகளுக்கு மாற்றாகவும் மாட்டு சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பயிற்சியை எங்களைப் போன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பெண்களுக்கு தனியார் அமைப்பு இலவசமாக பயிற்சி அளிக்கின்றனர். இதனால் எந்தவித கஷ்டமும் இன்றி வாழ்க்கையை நடத்துகி றோம்’’ எனத் தெரிவித்தனர்.புதுச்சேரி அடுத்த கரியமாணிக்கம் பகுதியில் மாட்டு சாணத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.மாட்டு சாணத்தால் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள்.