

சென்னை: தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயனடைகின்றனர். பஸ்பாஸ் விநியோக தாமதத்தை தவிர்க்க 2024–25 கல்வியாண்டில் எமிஸ் தளத்தில் உள்ள மாணவர் தரவுகளை தொகுத்து 25 சதவீதம் கூடுதலாக இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 2025- 26 நடப்பு கல்வி ஆண்டிலும் மாணவர் விபரங்கள் பெறப்பட்டு கட்டணமில்லா பேருந்து பயணஅட்டைகள் விரைந்து தயாரிக்கும் பணி போக்குவரத்து, பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்து செயல்படுத்தியது. இதன்படி நடப்பு கல்வியாண்டில் 60 லட்சம் மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கி போக்குவரத்துத் துறை புதிய சாதனை படைத்துள்ளது.