தேமுதிக தொகுதிகளை இறுதிசெய்ய சுதீஷ் தலைமையில் 6 பேர் குழு

தேமுதிக தொகுதிகளை இறுதிசெய்ய சுதீஷ் தலைமையில் 6 பேர் குழு
Updated on
1 min read

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. கூட்டணியில் கடைசியாக இணைந்த தேமுதிக-வுக்கு 10 தொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழுவை சுதீஷ் தலைமையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

இதில் இளங்கோவன், பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், எம்.ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விருகம்பாக்கம், ரிஷிவந்தியம், விருதுநகர், சாத்தூர், பண்ருட்டி, விருதாச்சலம், சேலம் மேற்கு, ஆம்பூர் உள்ளிட்ட 25 தொகுதிகளை தேமுதிக தனது விருப்பப் பட்டியலாக திமுக-விடம் தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in