பள்ளி கல்வித்துறையில் 6 இயக்குநர்கள் இடமாற்றம்

பி.ஏ.நரேஷ்

பி.ஏ.நரேஷ்

Updated on: 
1 min read

சென்னை: பள்​ளிக்​கல்​வித்​துறை செயலர் ஜெ.இன்​னசென்ட் திவ்யா வெளி​யிட்ட அரசாணை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தொடக்​கக் கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் மாற்​றப்​பட்டு பள்​ளிக்​கல்வி இயக்​குநராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அரசு தேர்​வு​கள் இயக்​குநர் கே.சசிகலா இட​மாற்​றம் செய்​யப்​பட்டு, தொடக்​கக் கல்வி இயக்​குநராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

ஆசி​ரியர் தேர்வு வாரிய உறுப்​பினர் எம்.பழனிசாமி மாற்​றப்​பட்டு, தனியார் பள்​ளி​கள் இயக்​குநராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். ஆசி​ரியர் தேர்வு வாரிய செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்​றப்​பட்டு, ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி (எஸ்எஸ்ஏ) கூடுதல் திட்ட இயக்​குநராக பணி​யமர்த்​தப்​படு​கிறார். தனியார் பள்​ளி​கள் இயக்​குநர் எஸ்.சுகன்யா இட​மாற்​றம் செய்​யப்​பட்டு ஆசி​ரியர் தேர்வு வாரிய செயலராக நியமிக்​கப்ப்​டுள்​ளார்.

ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி மாநில கூடுதல் திட்ட இயக்​குநர் எஸ்.உமா மாற்​றப்​பட்டு, அரசு தேர்​வு​கள் இயக்​குநராக நியமிக்​கப்​படு​கிறார். ஆசி​ரியர் தேர்வு வாரிஇணை இயக்​குநர் கே.ஸ்ரீதேவிக்கு இயக்​குநர் பதவி உயர்வு அளிக்​கப்​பட்டு ஆசி​ரியர் தேர்வு வாரிய உறுப்​பின​ராக பணி​யமர்த்​தப்​படு​கிறார்.

<div class="paragraphs"><p>பி.ஏ.நரேஷ்</p></div>
‘தமிழக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா?’ - பழனிசாமி பதில்

X