புதுச்சேரியில் புதிதாக 73 பேருக்குக் கரோனா; மேலும் 3 பேர் உயிரிழப்பு: 600-ஐக் கடந்த இறப்பு எண்ணிக்கை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று புதிதாக 73 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ. 7) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரியில் 3,981 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-58, காரைக்கால்-2, ஏனாம்-2, மாஹே-11 என மொத்தம் 73 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 35 ஆயிரத்து 744 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் வீடுகளில் புதுச்சேரியில் 543 பேர், காரைக்காலில் 138 பேர், ஏனாமில் 43 பேர், மாஹேவில் 59 பேர் என 783 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், புதுச்சேரியில் 274 பேர், காரைக்காலில் 47 பேர், ஏனாமில் 27 பேர், மாஹேவில் 81 பேர் என 429 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 1,212 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இன்று ஒரே நாளில் புதுச்சேரியில் 472 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் 11 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 494 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 931 (94.93 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 லட்சத்து 33 ஆயிரத்து 733 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 92 ஆயிரத்து 192 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in