காளையார்கோவிலுக்கு அதிக வாகனங்களில் சென்ற பாஜக நிர்வாகி உட்பட அக்கட்சியினர் மீது வழக்குப் பதிவு  

நேற்று சிலைமான் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர்.
நேற்று சிலைமான் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர்.
Updated on
1 min read

விதிமுறையை மீறி அதிக வாகனங்களில் காளையார்கோவிலுக்குச் சென்ற மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயலர் மகா சுசீந்திரன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது சிலைமான் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலிலுள்ள மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட அக்கட்சியினர் சென்றனர்.

அனுமதியின்றி அதிக வாகனங்களில் சென்ற எல். முருகன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளின் வாகனங்களை மதுரை விரகனூர் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆத்திரமடைந்த எல். முருகன் உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன்பின் போலீஸார் சமரசம் செய்து, அனுப்பி வைத்தன். இருப்பினும், பேரிடர் மேலாண்மை, ஊரடங்கு சட்ட விதிமுறையை மீறியது தொடர்பாக விரகனூர் கிராம நிர்வாக அலுவலர் குமாரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயலர் மகா சுசீந்திரன் உட்பட 10 மீது சிலைமான் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in