

மதுரை அருகே கோயில் தகராறில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலையானவரின் உடலை அப்புறப்படுத்தவிடாமல் உறவினர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது சூலப்புரம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தத் திருவிழாவை இருவேறு சமூகத்தினர் இணைந்து நடத்துவதால் அவ்வப்போது சர்ச்சைகள் உருவாவதும் பின்னர் அதிகாரிகள் சமாதானப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த தீச்சட்டி எடுப்பதில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்தாண்டு திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் இரு சமூகத்தினரிடையேயும் உசிலம்பட்டி வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் சுமுகமாகச் செல்வதாக உறுதியளித்தனர்.
அதன்பேரிலேயே இந்தாண்டு திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், சூலப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.இதனைக் கண்ட ஊர்மக்கள், உறவினர்கள் மற்றொரு சமூகத்தினரைச் சேர்ந்தவர்களே செல்லத்துரையை அடித்துக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும், சடலத்தை அப்புறப்படுத்தவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்கப்பட்டுள்ளனர். கொலை வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.