

மதுரை அருகே குன்னத்தூர் ஊராட்சி தலைவர், ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டனர். ஊராட்சி செயலர் நியமனம் தொடர் பாக ஏற்பட்ட பிரச்னையில் இந்த இரட்டை கொலை நடந்திருக் கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம், வரிச்சியூர் அருகிலுள்ளது குன்னத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக இருந்தவர் கிருஷ்ணன் (50). அதிமுக பிரமுகரான இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதே ஊரைச் சேர்ந்தவர் முனியசாமி(40). இவர் அந்த ஊராட்சியில் குடிநீர் திறந்துவிடும் ஆப்ரேட்டராகவும், எலக்ட்ரீசனாகவும் பணிபுரிந்தார். நண்பர்களான இருவரும் பெரும்பாலும் மாலை நேரத்தில் குன்னத்தூர் அருகில் சமணர் படுக்கை பாறையிலுள்ள சிவன் கோயில் பகுதியில் உட்கார்ந்து பேசுவது வழக்கம்.
அங்கன்வாடி ஊழியரான கிருஷ்ணன் மனைவி சித்ரா வெளியூர் சென்றதால் நேற்று மாலை மலைப்பகுதிக்கு சென்ற கிருஷ்ணனும் அவரது நண்பரும் நீண்ட நேரமாக அங்கு பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவுக்கு மேலும் அவரவர் வீட்டுக்கு வராதது கண்டு குடும்பத்தினர் அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ரிங் அடித்தாலும் எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்தனர். உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு போன் செய்து தேடினர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் இன்று அதிகாலையில் ஒருவர் மலைப்பகுதிச் சென்றுள்ளார். அப்போது இருவரும் கத்திக்குத்து காயங்களுடன் கொலையுண்டு கிடப்பது கண்டு அதிர்ந்தார். உடனே கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ஆய்வாளர் மாடசாமி, எஸ்ஐ செந்தூர்பாண்டி உள்ளிட்ட போலீஸார் விரைந்தனர். இருவரின் உடல்களை மீட்டு விசாரித்தபோது, குன்னூத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், அவரது நண்பர் முனியசாமி என்பது தெரியவந்தது.
கிருஷ்ணன்
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவில் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில் சம்பவ இடத்தில் இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குன்னூத்தூர், வரிச்சியூர் பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி மதுரை- சிவகங்கை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மதுரை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சென்று ஆய்வு செய்தார். கொலை யுண்டவர்களின் குடும்பத்தினரிடம் பேசினார். சந்தேகிக்கும் நபர்கள், ஏதாவது முன்விரோதம் இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆய்வாளர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில், குன்னத்தூர் ஊராட்சி யில் புதிதாக செயலர் நியமனம் தொடர்பாக தலைவருக்கும், மற்றொரு நபருக்கும் இடையே பிரச்னை இருந்ததாக கூறப் படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்திருக்குமா என, விசாரிக்கின்றனர்.