

சுங்கவரியால் லாரி உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டுமென தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்னம், பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டீசல் விலை உயர்வு, சுங்கவரி அதிகரிப்பு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, வாகன காப்பீடு தொகை உயர்வு ஆகிய காரணங்களால் லாரிகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் 4 லட்சம் லாரி மற்றும் வேன் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன.
இந்தியாவிலேயே தமிழகத் தில்தான் சுங்கச் சாவடிகள் அதிகமாக உள்ளன. கேரள மாநிலத்தில் சுங்கவரியை கேரள அரசே வசூல் செய்கிறது. மேலும், அங்கு கட்டணமும் குறைவாக உள்ளது. மேலும், ஒரு சுங்கச் சாவடியில் இருந்து 60 கி.மீ.க்கு பிறகு தான் மற்றொரு சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இந்த விதிமுறைக்கு மாறாக சில இடங்களில் 40 கி.மீ. தொலைவில் 3 இடங்களில் சுங்கச் சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றில், 29 சுங்கச் சாவடிகள் தனியார் வசம் உள்ளன. மீதமுள்ள 12 சுங்கச் சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் உள்ளன. விழுப் புரத்திலிருந்து சென்னைக்கு ஒரு லோடு மணல் எடுத்து வர லாரிக்கு சுங்கவரி ரூ.1,950 வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.58,500 ஆகிறது. வேலூரிலிருந்து சென்னைக்கு வரும் லாரிக்கு சுங்கவரி ரூ.850 வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.25 ஆயிரத்து 500 ஆகிறது. இதே போல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களுக்கு அதிக ளவில் சுங்கவரி வசூலிக்கப்படு வதால் லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்கச் சாவடிகள் மூலம் ஆண் டுக்கு ரூ.16 ஆயிரத்து 500 கோடி வருவாய் கிடைக்கிறது. சுங்கவரி ஒவ்வோர் ஆண்டும் 15 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் தமிழக அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தற்போது வசூல் செய்யப்படும் சுங்க வரி அளவை 50 சதவீதம் குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.