தமிழகத்தில் மழை தொடரும்

தமிழகத்தில் மழை தொடரும்
Updated on
1 min read

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக் காற்று சற்று வலுவாக இருப்பதால் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடியில் 9 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர், கடலூர் மாவட்டம் தொழுதூர், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் ஆகிய இடங்களில் 8 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 7 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 6 செ.மீ. நேற்று முன் தினம் பதிவாகியது. இதுதவிர கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து காற்று மேல் அடுக்கு சுழற்சியாக கடலோர ஆந்திரம் அருகே நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in