

புதுச்சேரியில் விதைநெல் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியின் மொத்த சாகுபடி பரப்பு 15 ஆயிரம் ஹெக் டேராக உள்ளது. நெற்களஞ்சிய மான பாகூர், திருக்கனூர், கரை யாம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் சம்பா பருவத்தை ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் விவசாயிகள் தொடங்குவர். இதில் வெள்ளை பொன்னி, பொன்மணி, டிபிடி ரக விதைகள் விதைப்பது வழக்கம்.
இவற்றில் வெள்ளை பொன்னி அதிகமாக பயிரிடப்படும். புதுச்சேரி வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் பாசிக் உழவர் உதவியகம் மூலம் விதை நெல்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சம்பா பருவம் தொடங்கிய நிலையில் விதை நெல் தட்டுப்பாடு நிலவு வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக 'தி இந்து' உங்கள் குரல் பகுதியில் விவசாயிகள் கூறும் போது: ‘‘புதுச் சேரியில் அரசு சார்பு நிறுவனமான பாசிக் உழவர் உதவியகம் மூலம் மானிய விலையில் விதைநெல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான ஆடிப்பட்டம் சம்பா பருவம் தற்போது தொடங்கியுள்ளது. ஆனால் தேவையான விதைநெல் உழவர் உதவியகத்தில் இல்லை.
இந்த பருவத்துக்கு இதுவரை 30 சதவீதம் பேருக்கே விதை நெல் கிடைத்துள்ளது. தனி யாரிடம் கூடுதல் விலை கொடுத் தாலும் விதைநெல் கிடைப் பதில்லை. இதனால் இந்த சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தஞ்சை உள்ளிட்ட தமிழகப்பகுதிகளுக்கு சென்று அதிக விலைக்கு விதை நெல் வாங்கி வருகிறோம். மானிய விலையில் விதை நெல் வழங்க பாசிக் நிறுவனத்துக்கு வேளாண் துறையில் இருந்து உத்தரவு வராததே தட்டுப்பாட்டுக்கு காரணம்’’ என்றனர்.
தட்டுப்பாடுக்கான காரணம்
புதுச்சேரி நாற்று நெல்விதை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும் போது: ‘‘15000 ஹெக்டேர் நிலத்துக் கான விதையை உற்பத்தி செய்ய 1 ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு திட்டமிடப் படவில்லை. 250 டன் அளவுக்கு இருக்க வேண்டிய விதைநெல் 50 டன் மட்டுமே உள்ளது. விதைநெல் உற்பத்தி செய்ய புதுச்சேரியில் விவசாயிகள், அதற்கு தேவையான பொருட் களும் உள்ளன.
அரசு 75 சதவீதம் மானியம் வழங்கி தரம்பார்த்து விதைநெல் கொள்முதல் செய்கிறது. கொள் முதல் செய்யப்பட்ட விதை நெல்லுக்கான தொகை ஒரு ஆண்டுகள் கழித்து வழங்கப் படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்பத்தி செய்து வழங்கப்பட்ட விதை நெல்லுக்கான மானியத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
வெளியில் இருந்து கொள் முதல் செய்த இடங்களில் பணம் கொடுக்க முடியவில்லை. வேளாண் அறிவியல் நிலையத்தில் 150 ஏக்கருக்கும் மேலாக நிலம் உள்ளது. இவற்றில் 13 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற நிலங்கள் தரிசாக உள்ளன. அரசிடம் சரியான திட்டமிடல் இருந் தால் விதைகள் தட்டுப்பாடு இல்லா மல் வழங்கலாம்’’ என்றனர்.
இயக்குநர் பதில்
இதுகுறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் ராமமூர்த்தியிடம் கேட்ட போது: ‘‘இந்த பருவத் திற்கு போதுமான அளவுக்கு நெல் உற்பத்தி செய்து விதை நெல் வழங்கப்பட்டது. புதுச் சேரியில் இருந்து 150 டன்னும், வெளியில் இருந்து 80 டன் விதை நெல்லும் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. கை நடவு செய்தால் 1 ஹெக்டேருக்கு 60 கிலோ விதை நெல் விட வேண்டும். இயந்திர நடவு என்றால் 1 ஹெக்டேருக்கு 25 கிலோ இருந்தால் போதும். தொழில்நுட்ப வசதிக்கேற்றார் போல் விதைநெல் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.
ஒரு ஆண்டுக்கான விதை நெல் உற்பத்தி செய்ய 3 ஆண்டு களுக்கு முன்னரே திட்டமிடப்படு கிறது. தட்பவெட்ப சூழலுக்கு ஏற்பவும், தற்போதைய மார்க் கெட் விலைக்கேற்றார் போல் விதைநெல் உற்பத்தி செய் கிறோம். வெள்ளை பொன்னி 1 கிலோ ரூ.34 அரசு மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே தனியாரிடம் ரூ.54 வாங்கு கின்றனர்.
உற்பத்தி செய்யப்படும் விதை நெல் விற்பனை ஆகாமல் போய் விடும் என்ற எண்ணத்தில் பாசிக் நிறுவனம் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளது. மேலும் விவசாயிகள் தாமதமாக பயிரிடுவ தால் அவர்களுக்கு விதைநெல் கிடைக்காமல் இருக்கலாம்" என்றார்.