இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்த தயார்: தேர்வு அட்டவணையை எதிர்பார்க்கும் அரசு கல்லூரிகள்

இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்த தயார்: தேர்வு அட்டவணையை எதிர்பார்க்கும் அரசு கல்லூரிகள்
Updated on
1 min read

இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதிப் பருவத் தேர்வு நடத்த தயார் நிலையில் இருப்பினும் தேர்வு அட்டவணையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பல்கலைக்கழக, அரசுக் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித் துள்ளன.

கரோனா ஊரடங்கால் பல்கலை க்கழகங்கள், கல்லூரிகள் மூடப் பட்டுள்ளன. 2019-20 கல்வியாண்டுக் கான இரண்டாவது, நான்காவது, ஆறாவது பருவத் தேர்வுகள் நடத்தப் படவில்லை.

இதையடுத்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான மூன்றாவது, நான்காவது பருவத் தேர்வுகள் மற்றும் தேர்ச்சி பெறாத பாடங்களின் (அரியர்ஸ்) தேர்வுகளை அரசு ரத்து செய்தது.தேர்வுக்குப் பணம் கட்டிய தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான ஆறாவது பருவத் தேர்வு நடத்தப்படும் என தமிழக உயர்கல்வித் துறை அறிவித்தது. அந்தந்த மாவட்டங்களிலுள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் விதிகளைப் பின்பற்றி உள்ளூர், வெளியூர் மாணவர்களுக்கு அவரவர் ஊர்களில் தேர்வு மையம் ஏற்பாடு செய்தும், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருப்போருக்கு ஆன்லைனிலும் தேர்வு நடத்தலாம் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.

செப்.15 அல்லது 16 முதல் 30-ம் தேதி வரை தேர்வை நடத்தத் திட்ட மிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அரசு, உதவிபெறும் கல்லூரிகள், பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு உயர்கல்வித் துறை இயக்குநரகம் ஏற்கெனவே அறிவுறுத்தியது.

இதையடுத்து அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இறுதியாண்டுப் பருவத் தேர்வுகளுக்குத் தயாராக உள்ளன. இது குறித்து அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுக்கு உத்தேச கால அட்டவணை தயாரிக்கப்பட்டு செப்.16-ல் இருந்து தேர்வு தொடங்கும் என முதல்கட்ட தகவல் கிடைத்தது. அதன்படி, அரசு, உதவி பெறும் கல்லூரிகளில் அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து தேர்வு அறைகளைத் தயார் செய்துள் ளோம். சுமார் 4 அடி இடை வெளி யுடன் ஒவ்வொரு அறையிலும் 20 மாணவர்கள் வரை அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளியூர்களில் பயிலும் உள்ளூரில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் 5-க்கும் மேற்பட்ட சிறப்பு அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதுநிலை இறுதிப் பருவத் தேர்வுக்கும் அறைகள் தயாராக உள்ளன. இவர்களுக்கான செய்முறை, அகமதிப்பீட்டுத் (இன்டர்னல்) தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை நடத்தத் தயார் நிலையில் இருக்கிறோம். ஆனால், தேர்வு கால அட்டவணை வரவில்லை என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in