காமராசர் பல்கலை தேர்வுத்துறை முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை- கலக்கத்தில் புகாரில் சிக்கியவர்கள்   

காமராசர் பல்கலை தேர்வுத்துறை முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரை- கலக்கத்தில் புகாரில் சிக்கியவர்கள்   
Updated on
1 min read

காமராசர் பல்கலை தேர்வுத்துறை முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காமராசர் பல்கலையில் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண், மார்க் பட்டியலில் திருத்தம், போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு, தேர்வு எழுதாமலேயே வெளியூர் மையங்களில் இருந்து விடைத் தாள்களைபல்கலைக்கு அனுப்பியது என, பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது போன்ற புகார், முறைகேடுகளை விசாரிக்க, சில நாட்களுக்கு முன், பல்கலைக்கழகசிண்டிகேட் உறுப்பினர் ஆர். லட்சுமிபதிதலைமையில் சிறப்புக்குழு ஒன்றை துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் நியமித்து உத்தரவிட்டார். பல கட்ட விசாரணைக் குபின் இக்குழு கடந்த வாரம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

அறிக்கையில் கூறியிருப்பதாவது; தேர்வாணையர் முதல் தற்காலிக பணியாளர்கள்என, சுமார் 30 பேரிடம் விசாரித்து பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் பார்த்தால் எல்லாமுறைகேடுகளும் தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர்அலுவலகங்கள் மூலமே நடந்திருப்பது தெரிகிறது.

புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜரானவர்கள்ஒருவர், மற்றொருவரை புகார் தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பதிலளிப்பதும் தெரியவந்தது. நேரடியாக யாரும் தவறுகளை சுட்டிக் காட்ட வில்லை விளக்கமளிக்க மறுத்தனர். இதனால் தவறு செய்தவர் களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. முறைகேடு பற்றி உண்மை நிலையை கண்டறிய சிபிசிஐடி விசாரிக்க இக்குழு பரிந்துரைக்கிறது.

மேலும், தொலை நிலைக்கல்வியில் தற்காலிக ஊழியர் ஒருவர் கூறியதன்பேரில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில்குறிப்பிட்ட சில தேர்வர்களுக்கு பெண் கவுரவிரிவுரையாளர் ஒருவர் அதிக மதிப்பெண்வழங்கியுள்ளார். அவர் மீதும் அவருக்கு அழுத்தம் கொடுத்த ஊழியரை பணி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

விடைத்தாள்கள் செருகல் முறைகேட்டில் தொடர்புடைய துணைப்பதிவாளர் ,உதவி பதிவாளர் , தற்காலிக பணி யாளர்கள்என, 8 பேர் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் 2019 நவம்பரில் நடந்த பருவத்தேர்களில் விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரிவதால் அந்த தேர்வுகளை ரத்து செய்யலாம் என, முடி வெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட வெளிமாநில தொலைநிலை கல்வி மையங்களில் தேர்வர்கள் வீட்டில் இருந்தபடி தேர்வெழுதியதும், இதற்காக லட்சக்கணக்கில் மைய நிர்வாகிகள் பணம் வசூலித்த தகவலும் வெளியாகியது. இந்த முறைகேட்டை விசாரிக்க சிபிசிஐடி விசாரணை அவசியம் என்பதையும் இக்குழு பரிந் துரைக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறியிருப்பதாக விசாரணைக் குழு தெரிவிக்கிறது. இந்த அறிக்கையால் புகாரில்சிக்கியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in