

வேலூர் அருகே பாட்டுக் கச் சேரியை தடுத்து நிறுத்திய காவல் உதவி ஆய்வாளரை கத்தி யால் குத்திய சம்பவத்தில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீ ஸார், 6 பேரை கைது செய்தனர்.
வேலூர் அடுத்த கம்ம வான்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளியில் செவ்வாய்க் கிழமை இரவு பாட்டுக் கச் சேரி நடந்துள்ளது. வேலூர் தாலுகா காவல் நிலைய போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். இரவு 10 மணி வரை பாட்டுக் கச்சேரி நடத்த அனு மதி வாங்கியிருந்தனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை யும் கடந்து பாட்டுக் கச்சேரி தொடர்ந்து நடந்தது. இதை யடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீஸார் பாட்டுக் கச்சேரியை உடனடியாக நிறுத்தும்படி கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீஸாருக்கும் பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்த விழாக் குழுவினருக்கும் இடையே வாக்கும்வாதம் ஏற்பட்டது.
திடீரென ஒரு கும்பல், உதவி ஆய்வாளர் நாகராஜ், சிறப்புக் காவல் படை இளைஞர் ராஜேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இந்த களேபரத்தில் கூட்டத் தில் இருந்த ஒருவர் உதவி ஆய்வாளர் நாகராஜை கத்தி யால் குத்தியுள்ளார். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் இருவரையும் மீட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் நாகராஜ் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரதீப், காந்தி, சீனிவாசன், தனசேகர், செல்வம், மோகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஏழுமலை, ஊராட்சிமன்ற தலைவர் சிவாஜி, ஊர் நாட்டாண்மைகள் தேவராஜ், தவமணி, சேகர் மற்றும் பாட்டுக் கச்சேரி குழு தலைவர் டேவிட்சன் உள்ளிட்ட 12 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், பிரதீப், காந்தி, சீனிவாசன், தனசேகர், செல்வம், டேவிட்சன் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.