

தமிழகளவில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் 85 பேருக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஎஸ்பி பதவி உயர்வு வழங்கி, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற 13 பேர் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகரில் பல பிரிவுகளில் டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் விவரம்: மதுரை சிபிசிஐடி (ஒசியூ) ஆய்வாளர் வேல் முருகன் அதே பிரிவிலுள்ள க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். நெல்லை தாலுகா ஆய்வாளர் ரகுபதிராஜா மேலூருக்கும், திருப்பூர் ஆய்வாளர் சரவணன் ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும், தென்காசி குருவிக்குளம் ஆய்வாளர் கண்ணன் மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், சென்னை செக்யூரிட்டி கிளை ஆய்வாளர் ராஜன் உசிலம்பட்டி உட்கோட்டத்திற்கும், சிவகங்கை மனித உரிமை மீறல், பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர் சம்பத் ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கும் டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ராமநாதபுரம் கீழக்கரை ஆய்வாளர் தங்ககிருஷ்ணன் ஆண்டிபட்டி டிஎஸ்பியாகவும், நீலகிரி நடுவாட்டம் ஆய்வாளர் அக்பர்கான் மதுரை நகர் வரதட்சணை தடுப்பு பிரிவு உதவி ஆணையராகவும், பரமக்குடி நகர் ஆய்வாளர் திருமலை ராமநாத புரம் மாவட்ட குற்றத்தடுப்பு டிஎஸ்பியாகவும், சிவகாசி கிழக்கு காவல் ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் விருதுநகர் மது விலக்கு டிஎஸ்பியாகவும், சென்னை காவல் ஆய்வாளர் சம்பத் குமார் மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு டிஎஸ்பி யாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், தென்மண்டல காவல் ஆய்வாளர் அருணாச்சலம் விருதுநகர் உட்கோட்ட டிஎஸ்பி யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.