நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மதுரையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மதுரையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளான நீட், ஜேஇஇ ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி, மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட உள்ளது. கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுகளை நடத்தும் என்டிஏ தெரிவித்துள்ளது. தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை தல்லாகுளம் தபால் தந்தி நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதுரை மாநகர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், தொழிற்சங்க, வர்த்தக, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in