

"தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடத் தயார். எனக்கு பதவி முக்கியம் அல்ல ; தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு உணவளிக்க, அம்மா கிச்சன் தொடங்கி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளது.
இதற்கு ஊக்கமளிக்கும் முதல்வர், துணை முதல்வருக்கு ஜெயலலிதா பேரவையின் சார்பில், நன்றி தெரிவித்து, வருவாய்த் துறை அமைச்சர், மதுரை மேற்கு மாவட்ட அதிமுக செயலர் ஆர்பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்.
மதுரையில் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் நடந்த பேரவைக் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் வகையில், அம்மா திருப்பெயரால்அட்சய பாத்திரமாகதிகழம் அம்மாகிச்சன் கரோனா தடுப்புக்கான முடிவு எட்டும் வரை உணவு தயாரிக்கும் அணையா நெருப்பாக செயல்படும்.
இந்த கிச்சனை முதல்வர், துணை முதல்வர் பாராட்டியது மட்டுமின்றி, தங்களை மனம் கவர்ந்த திட்டம் என, வாழ்த்தி ஊக்கமளித்த இருவருக்கும் இந்த 50-வது நாளில் கோடான கோடி நன்றியை தெரிவிக்கிறோம்.
தமிழக நலன் கருதி மாவட்டந்தோறும், நோய் தடுப்பு ஆலோசனை, வளர்ச்சி திட்டங்கள் மட்டுமின்றி விவசாயில், தொழிலபதிபர்கள், சுய உதவிக்குழுக்கள் என, அனைத்து தரப்பினரையும் சந்தித்து, ஒட்டு மொத்த மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் சாமானிய முதல்வர் மற்றும் அவருக்கு துணை நிற்கும் துணை முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 5 மாதமாகமக்களை சந்திக்காமல்மக்கள் நலனைப்பற்றி சிந்திக்காமல்காணொலி மூலம் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் பொய் பிரசாரத்தை தோலுரித்துக் காட்டிட பேரவை கூட்டம் உறுதியேற்றுள்ளது.
தனது பதவி பற்றி மட்டும் சிந்திக்கும் முக ஸ்டாலின், மக்கள் நலனை சிந்திக்காமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவரது செயலே அவருக்கு சாட்சியாக உள்ளது.
மதுரையில் தொடர்ந்து நேற்றுடன் 50 நாட்களை கடந்துமக்கள் பணியாற்றும் அம்மா கிச்சனுக்குஆக்கமும், ஊக்கம் அளிக்கும் அனைவருக்கும் பேரவை சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்.
இக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் ,மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்பிஉதயகுமார்,‘‘ தென்மாவட்ட வளர்ச்சி தொடர்பாக மதுரை யை 2 வது தலைநகராக்கும் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படும். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடத் தயார். எனக்கு பதவி முக்கியம் அல்ல; தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்’’ என்றார்.