சாராய வியாபாரி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆம்பூர் அருகே பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதனுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற சாராய வியாபாரி அஜீத்.
ஆம்பூர் அருகே பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதனுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற சாராய வியாபாரி அஜீத்.
Updated on
1 min read

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மிட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் சாராய வியாபாரி அஜீத்(36). இவர் மீது பல்வேறு வழக்குகள் உமராபாத், ஆம்பூர், மேல்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி சாராய வியாபாரி அஜீத் தனது பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடினார். இந்த விழாவில் உமராபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஸ்வநாதனும் விழாவில் கலந்து கொண்டார்.

உதவி ஆய்வாளருக்கு, சாராய வியாபாரியான அஜீத் சால்வை அணிவித்தும் கேக் ஊட்டியும் மகிழ்ந்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் வைரலாக பரவி சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், விஸ்வநாதனை நேற்று முன்தினம் ஆயுத படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in