

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலை நடத்த கால அட்டவணை கடந்த ஜூலை 15-ல்வெளியிடப்பட்டது. முத்தவல்லி பிரிவுக்கான தேர்தல் இன்று நடக்க இருந்தது.
இந்த நிலையில், வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதை எதிர்த்தும், வக்ஃப் வாரியத்தை திருத்தி அமைப்பதற்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கையை எதிர்த்தும்உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளில், முத்தவல்லிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட சையத் அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோருக்கு மட்டும் தேர்தல் நடவடிக்கைகள் பொருந்தாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் காரணமாக, 2 முத்தவல்லிகளை தேர்வு செய்வதற்காக இன்றுநடக்க இருந்த தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது. தேர்தல் அதிகாரிநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.