ஊரக பகுதி பெண்களுக்கு 10,000 கறவை மாடுகள்: இலவசமாக வழங்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு

ஊரக பகுதி பெண்களுக்கு 10,000 கறவை மாடுகள்: இலவசமாக வழங்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் ஊரகப் பகுதி​களில் வாழும் தகுதி​யான 10 ஆயிரம் பெண்​களுக்கு இல​வச கறவை மாடுகள் வழங்​கும் திட்​டத்​துக்​காக தமிழக அரசு ரூ.57 கோடி நிதி ஒதுக்​கி​யுள்​ளது.

இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பால் உற்​பத்​தியை அதி​கரிக்​கவும் ஊரகப் பகுதி​ பெண்​களின் வாழ்​வாதா​ரத்தை உறுதிசெய்​ய​வும் ஆண்​டுதோறும் 10 ஆயிரம் தகுதிவாய்ந்த பெண்​களுக்​குக் கறவை மாடுகள் விலை​யில்​லாமல் வழங்​கப்​படும் என்று அமைச்​சர் நெ.மரிய​வில்​சன் கடந்த பட்​ஜெட்​டில் அறி​விப்பு வெளி​யிட்​டிருந்​தார்.

இதை செயல்​படுத்​தும் வகை​யில் அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. மேலும், இதற்​காக ரூ.57 கோடி நிதி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தத் திட்​ட​மானது சிறப்​பான உற்​பத்​தித் திறன் கொண்ட பால் சொத்​துகளை உரு​வாக்​கு​வதன் மூலம் ஊரகப்பெண்​களின் வாழ்​வாதா​ரம், வரு​மானத்​தை மேம்​படுத்​து​ம்.

இத்​திட்​டத்​தின்​கீழ் ஒவ்​வொருபயனாளிக்​கும் குறைந்​த​பட்​சம் தினமும் 8 லிட்​டர் பால் கறக்​கும் திறனுள்ள ஆரோக்​கிய​மான, அதிக பால் தரும் கலப்​பின கறவை மாடு வழங்​கப்​படும். இதன்​மூலம் பயனாளி குடும்​பத்​துக்கு வழக்​க​மான வரு​மான ஆதா​ரம் உறுதி செய்​யப்படும்.

முறை​யான கால்​நடை பராமரிப்பு மற்​றும் அறி​வியல் மேலாண்மை மூலம், 5 ஆண்டு காலத்​தில் ஒவ்​வொரு மாடும் 3 முதல் 4 கன்​றுகளை ஈனும் என்று எதிர்​பார்க்​கப்​படுவ​தால், இது நீண்ட காலச் சொத்து உரு​வாக்​கத்​துக்​கும் நிலை​யான பொருளாதார நன்​மை​களுக்​கும் வழிவகுக்​கும்.

ஊரக பகுதி பெண்களுக்கு 10,000 கறவை மாடுகள்: இலவசமாக வழங்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in