சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை கிடைக்கும்
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு
Updated on: 
2 min read

சென்னை: தீபாவளியை முன்​னிட்டு தமிழக அரசில் அனைத்து பொதுத்​துறை நிறு​வனங்​களில் பணிபுரியும் சி மற்​றும் டி பிரிவு பணி​யாளர்​களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இது​குறித்து தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட அறி​விப்பு: தமிழகத்​தின் பொருளாதார வளர்ச்​சிக்​கும், பொதுத்​துறை நிறு​வனங்​களின் செயல்​பாட்​டுக்​கும் முக்​கியப் பங்​களிக்​கும் தொழிலா​ளர்​கள் மற்​றும் பணி​யாளர்​களின் உழைப்​பையும், அர்ப்​பணிப்​பையும் அங்​கீகரித்து, அவர்​களை ஊக்​கு​விக்​கும் வகை​யில், 2025–26-ம் ஆண்​டுக்​கான மிகை ஊதி​யம் மற்​றும் கருணைத் தொகையை வழங்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

ஊதி​யச் சட்​டத் தொகுப்பு, 2019-ன் படி (முன்பு திருத்​தப்​பட்ட போனஸ் சட்​டம், 2015) மிகை ஊதி​யம் பெறத் தகுதி​யான சம்​பள உச்​சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும், இதன்​படி மிகை ஊதி​யம் கணக்​கிட மாதாந்​திர சம்​பள உச்​சவரம்பு ரூ.7 ஆயிரம் எனவும் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

லாபம் ஈட்​டியுள்ள பொதுத்​துறை நிறு​வனங்​களில் பணிபுரியும் ‘சி’ மற்​றும் ‘டி’ பிரிவு தொழிலா​ளர்​கள் மற்​றும் பணி​யாளர்​களுக்கு அந்​தந்த நிறு​வனங்​களின் ஒதுக்​கக்​கூடிய உபரித் தொகையை கணக்​கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதி​யம் மற்​றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என 20 சதவீதம் வரை வழங்​கப்​படும்.

தமிழ்​நாடு மின் பகிர்​மானக் கழகம், அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​கள், நுகர்​பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்​துறை நிறு​வனங்​கள் மற்​றும் பால் உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு இணை​யத்​தில் பணிபுரியும் தகுதி​யுடைய ‘சி’ மற்​றும் ‘டி’ பிரிவு தொழிலா​ளர்​கள் மற்​றும் பணி​யாளர்​களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதி​யம் மற்​றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என 20 சதவீதம் வழங்​கப்​படும்.

ஒதுக்​கக்​கூடிய உபரித் தொகை இல்​லாத பொதுத்​துறை நிறு​வனங்​களில் பணிபுரியும் ‘சி’ மற்​றும் ‘டி’ பிரிவு தொழிலா​ளர்​கள் மற்​றும் பணி​யாளர்​களுக்கு 8.33 சதவீதம் குறைந்​த​பட்ச மிகை ஊதி​யம் மற்​றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்​தம் 10 சதவீதம் வழங்​கப்​படும்.

தமிழ்​நாடு வீட்​டுவசதி வாரியம் மற்​றும் சென்னை குடிநீர் வழங்​கல் மற்​றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகிய​வற்​றில் பணிபுரியும் தகுதி​யுடைய ‘சி’ மற்​றும் ‘டி’ பிரிவு பணி​யாளர்​களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதி​யம் மற்​றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்​கப்​படும். தமிழ்​நாடு குடிநீர் வடிகால் வாரியத்​தில் பணிபுரியும் தகுதி​யுடைய ‘சி’ மற்​றும் ‘டி’ பிரிவு பணி​யாளர்​களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதி​யம் வழங்​கப்​படும்.

தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணி​பக் கழகத்​தில் தற்​காலிக அடிப்​படை​யில் பணிபுரியும் தொழிலா​ளர்​களுக்கு ரூ.3ஆயிரம் கருணைத் தொகை​யாக வழங்​கப்​படும். இத​னால், மிகை ஊதி​யம் பெறத் தகுதி​யுள்ள நிரந்​தரத் தொழிலா​ளர்​கள் குறைந்​த​பட்​சம் ரூ.8,400 மற்​றும் அதி​கபட்​சம் ரூ.16,800 வரை பெறு​வர்.

மொத்​தத்​தில், தமிழ்​நாடு அரசின் பொதுத்​துறை நிறு​வனங்​களில் பணிபுரியும் 2 லட்​சத்து 60 ஆயிரத்து 497 தொழிலா​ளர்​களுக்கு ரூ.367.20 கோடி மிகை ஊதி​யம் மற்​றும் கருணைத் தொகை​யாக வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு
ஆவின் நெய் உள்ளிட்ட 67 பொருட்களின் விலை உயர்வு - கட்சித் தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in