

சுதந்திர தின விழா வந்துவிட்டால் போதும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான விழா ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.
மாணவ. மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், தியாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அரசு அலுவலர்களுக்கு சிறந்த பணிக்கான விருது, கேடயம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆனால், நாட்டின் 74-வது குடியரசு தினவிழா வரும் (ஆக., 15) கொண்டாடும் நிலையில், அதற்கான முன்னேற்பாடு, ஒத்திகை நிகழ்ச்சிகள் உற்சாகமின்றியே காணப்படுகிறது.
கரோனா தடுப்பு ஊரடங்கால் அதிக கூட்டமின்றி விழாவை நடத்த மாவட்ட நிர்வாகங்கள் ஏற்பாடு செய்கின்றன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்பதால் சமூக இடைவெளியோடு கூடிய காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதைக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதன்படி மதுரையிலும் ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது. பட்டாலியன், ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் துப் பாக்கிய ஏந்திய ஒத்திகையில் பங்கேற்றனர்.
நாளை காலை நடைபெறும் ஒத்திகையில் ஆட்சியர் டிஜி.,வினய் கொடியேற்றுகிறார். காவல்துறை தென்மண்டல ஐ.ஜி, முருகன், நகர்க் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, எஸ்.பி சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் சமூக இடைவெளியைப் பின்பற்றி பங்கேற்கின்றனர்.
சானிடைசர், கைகளைக் கழுவது, காய்ச்சல் பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது எனக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.