

கர்நாடக மாநிலம் கார்வார், மாண்டியா, மத்தூர் ஆகிய மாவட் டங்களில், கரும்பு விவசாயிகள் மற்றும் ஹசிருசேனே அமைப்பு சார்பில் நதிகளை இணைக்க வேண்டும் என்பது உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று முழு அடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட் டம் நடத்தப்பட்டது. இதற்கு கர் நாடகா மாநிலத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், கன்னட அமைப்பு களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
விவசாயிகள் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு இயக் கப்பட்டு வந்த தமிழக அரசுப் பேருந்துகள் நேற்று இயக்கப்பட வில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந் துகளும் ஓசூர் பேருந்து நிலை யத்தில் நிறுத்தப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற 350-க்கும் மேற் பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி வரை இயக்கப் பட்டன. இதேபோல், ஓசூரில் இருந்து கர்நாடகா மாநில எல்லை யான அத்திப்பள்ளி வரை இயக் கப்படும் தமிழக நகர பேருந்துகள் நேற்று மாலை வரை ஜூஜூவாடி வரை மட்டுமே இயக்கப்பட்டன.
கர்நாடகா மாநிலத்துக்குச் சென்ற பயணிகள் பலர் ஜூஜூவாடி யில் இறங்கி, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக நடந்து அத்திப்பள்ளிக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து கர்நாடகா மாநில அரசுப் பேருந்துகளில் ஏறி பெங்களூருக்குச் சென்றனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஓசூர், வேலூர், சென்னை உள் ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டன. மாலை 6 மணிக்கு பின்னர் வழக்கம் போல் தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டன.