மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல்

மூணாறு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல்
Updated on
1 min read

மூணாறு நிலச்சரிவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரரை சந்திரபிரபா எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாக கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கன மலையின் காரணமாக மூணாறு ராஜமலை உள்ள பெட்டிமுடி என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர் தங்கியிருந்த குடியிருப்பின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த குடியிருப்பில் 40 குடும்பத்தை சேர்ந்த 93 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்‌. கடந்த 5 நாட்களாக அப்பகுதியில் மழை பெய்வதால் தொழிலாளர்கள் வீட்டிலேயே மூடங்கியிருந்தனர்.

மழை காரணமாக 4 நாட்களாக இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் யாரிமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. முதலிம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மூணாறு பெரியார் வர தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றதால் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்ல முடியவில்லை .பின் தற்காலிக பாலம் சரி செய்யப்பட்டு தற்பொழு வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலச்சரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராசையா, சரோஜா(எ) மகாலட்சுமி, ஜோஸ்வார, அருண்மகேஸ்வரன் என 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் அண்ணாதுரை மற்றும் மரியபுஷ்பம் ஆகியோரின் சடங்குகளையும் போலீசார் தேடி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இறந்தவரின் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா ஆறுதல் கூறினார். அப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து தருவதாகவும், முதல்வர் பழனிசாமி இடம் தெரிவித்து உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in