கரோனா ஊரடங்கால் விநாயகர் சிலைகள் தேக்கம்: ஆர்டர் இல்லாமல் தவிக்கும் உற்பத்தியாளர்கள்

கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கிடைக்காமல் தேக்கம் அடைந்துள்ள விநாயகர் சிலைகள்.
கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கிடைக்காமல் தேக்கம் அடைந்துள்ள விநாயகர் சிலைகள்.
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்திக்காக தயாரிக்கப்பட்ட சிலைகள், வெளியூர் ஆர்டர் இல்லாமல் தேக்கமடைந்துள்ளன என சிலை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சிலைகள் தயாரிப்பினை, கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கினர். பாகுபலி, பஞ்சமுகம், வீர விநாயகர், அவதார விநாயகர், சாந்த முக விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள், ஒரு அடி முதல் 15 அடி வரை தயார் செய்யப்பட்டன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு அமலாக்கப்பட்டதால் விநாயகர் சதுர்த்திக்காக தயாரிக் கப்பட்ட சிலைகளுக்கு,வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து இதுவரை ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை என சிலை உற்பத்தி யாளர்கள் வேதனை தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விநாயகர் சிலைகள் உற்பத்தியாளர் ராஜா கூறும்போது, ‘‘இங்கு தயாரிக்கப்படும் சிலை களை கர்நாடக, ஆந்திர மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங் களிலிருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

தற்போது கரோனா ஊரடங்கால் வியாபாரிகள் சிலைகளுக்கான ஆர்டரை இதுவரை கொடுக்க வில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலை தான் உள்ளது.

இந்த ஆண்டு சிலை விற்பனை பாதிக்கப்பட்டால், வாழ்வாதாரம் இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே, விநாயகர் சதுர்த்தியையொட்டி சில கட்டுப் பாடு களுடன் சிலைகளை விற்பனை செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும், என்றார். எஸ்.கே.ரமேஷ்


அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in