

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்கிறது. இதற்கான நுழைவுத் தேர்வுக்கு அக்டோபர் மாதம் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக சென்னையில் தமிழக அரசு நடத்தி வரும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் அரசின் கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்க்கீஸ் சுங்கத் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு தமிழக அரசு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்ட தாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32. பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
முழு நேரம் விடுதியில் தங்கியிருந்து பெறும் பயிற்சிக்கு 225 பேரும், பகுதி நேர பயிற்சிக்கு 100 பேரும் தேர்வுசெய்யப்படுவர். விடுதியில் தங்கியிருந்து பயிற்சி பெறுவோருக்கு இலவச பயிற்சி, தங்கும் வசதி, உணவு அளிக்கப்படும். தகுதியான நபர்கள் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். நுழைவுத் தேர்வு நவம்பர் மாதம் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும். இதில் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
நுழைவுத்தேர்வு எழுதுவதற் கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ராஜா அண்ணாமலைபுரம் பி.எஸ்.குமாரசாமி சாலையில் உள்ள (காஞ்சி கட்டிடம்) அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பத்தைப் பெற்று அங்கு சமர்ப்பிக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு >http://www.civilservicecoaching.com/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப் படும். அதிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச் சீட்டு, வீட்டு முகவரிக்கு தபாலில் அனுப்பப்படமாட்டாது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப படிவங் களை அக்டோபர் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
பயிற்சி விவரம், வகுப்பு நேரம், நுழைவுத்தேர்வு மையங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம் போன்றவற்றை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.