கார்கில் வெற்றி தின கொண்டாட்டம்

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா அஞ்சலி செலுத்தினார். படம்: பு.க.பிரவீன்
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி சென்னை தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா அஞ்சலி செலுத்தினார். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

தென்பிராந்திய ராணுவ தலைமையகம் சார்பில், கார்கில் வெற்றி தினம் கொண்டாடப் பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் வெற்றி தினமாககொண்டாடப்படுகிறது.

இதன்படி, சென்னையில் உள்ள தென் பிராந்திய ராணுவ தலைமையகம் சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. இதில், தென்பிராந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா பங்கேற்று, கார்கில் போரில் உயிரிழந்தவீரர்களின் நினைவாக போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், இப்போரில் பங்கேற்ற வீரர்களையும் அவர் கவுரவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in