

தமிழகத்தின் பல்வேறு கோயில் களில் ரூ.27.09 கோடியில் கட்டப்பட்ட அன்னதானக் கூடம், காத்திருப்பு அறைகள், விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உற்சவர் திருக்கல்யாண மண்டபம் மற்றும் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பக்தர்கள் ஓய்வுக் கூடம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, வாலாஜாபேட்டை பச்சையம்மன், சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன், பிடாரியம்மன் மற்றும் விநாயகர், தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி, சூரியனார் கோயில்கள் மற்றும் நாகை, திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், தேனி , தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர், நெல்லை மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ரூ.5 கோடியே 43 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் 24 அன்னதான கூடங்கள் கட்டப் பட்டுள்ளன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அன்னதான கூடம் மேம்படுத்தப் பட்டுள்ளது. ரங்கம் கோயிலில் காத்திருப்போர் கூடம், நெல்லை, தஞ்சை, திருச்சி, திருவள்ளூரில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட் டுள்ளன.
மேலும் நாமக்கல், நெல்லை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் தங்கும் மண்டபங்கள், ஓய்வுக் கூடங்கள், முடி காணிக்கை மற்றும் தர்ப்பண மண்டபங்கள், கருணை இல்லங்களும் சத்திய மங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்காக பவானி ஆற்றில் நீரேற்று நிலையம், கோயில் தேவஸ்தானங்களுக்கு சொந்தமான பள்ளிகளில் கூடுதல் குளியலறை மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு கோயில்களில் மொத்தம் ரூ.27 கோடியே 9 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கள் ஆர்.காமராஜ், எஸ்.பி.சண்முகநாதன், கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கு.ஞான தேசிகன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.