கரோனாவால் சிறப்பு எஸ்.ஐ மரணம்: மதுரையில் காவல்துறையில் முதல் கரோனா பலி- டிஐஜி, எஸ்.பி மரியாதை

கரோனாவால் சிறப்பு எஸ்.ஐ மரணம்: மதுரையில் காவல்துறையில் முதல் கரோனா பலி- டிஐஜி, எஸ்.பி மரியாதை
Updated on
1 min read

மதுரையில் கரோனாவால் சிறப்பு எஸ்.ஐ ஒருவர் மரணமடைந்தார். மாவட்டத்தில் காவல்துறையில் இதுவே முதல் கரோனா உயிரிழப்பு என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனாவால் நகர் காவல்துறையில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் சிகிச்சை பின், குணமடைந்து வீடு திரும்பினர். சிலர் பணிக்கும் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மதுரை செக்கானூரணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது ஆய்வில் தெரிந்தது.

52 வயதான அவர் தோப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர், செக்கானூரணி காவல் நிலையத்தில் பணிபுரிவோர் மற்றும் அவரது பேட்ஜில் பணியில் சேர்ந்த காவல்துறையினரும் சமூக விலகலுடன் தள்ளியிருந்து பங்கேற்றனர். அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி சுஜித்குமார் ஆறுதல் கூறினார்.

இன்று செக்கானூரணி காவல் நிலையத்தில் அவரது உருவப்படத்திற்கு மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், எஸ்பி சுஜித்குமார் உள்ளிட் டோர் மாலை அணிவித்து மரியாதை அளிக்க இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ம

ரணமடைந்த எஸ்ஐயின் சொந்த ஊர் கருமாத்தூர் அருகிலுள்ள நத்தப்பட்டி கிராமம். 1989-ல் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். அவருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். யாருக்கும் திருமணம் ஆகவில்லை.

இம்மாவட்டத்திலயே கரோனாவுக்கு காவல்துறையைச் சேர்ந்த முதல் மரணம். ஏற்கனவே மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் கரோனா பாதித்து உயிரிழந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in