மூச்சுத் திணறல் பிரச்சினையால் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

மூச்சுத் திணறல் பிரச்சினையால் அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மூச்சுத் திணறல் பிரச்சினை காரணமாக நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வராததால், அதுபற்றி உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.

கடந்த மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், இதேபோல அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கரோனா தொற்று என தகவல் பரவியது. இதை மறுத்த அவர், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்ததாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அப்போது அவருக்கு மேற்கெள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் உடல்நலம் தேறி அவர் வீடுதிரும்பினார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனை முடிவு வந்தபிறகே அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in