

யாரோ எழுதிக்கொடுக்கும் மக்கள் நலனற்ற அறிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா பேரவை சார்பில்,திருமங்கலம் பகுதியில் பொது மக்களுக்கு கபசுரகுடிநீர், முகக்கவசம், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது;
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு ஒருகோடிக்கு மேற் பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாதம்வரை தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது, அதிகரித் தாலும், உச்சம் தொட்டுபடிப்படியாக குறையும் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஜனநாயக நாடு. வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து யாரும் வரக்கூடாது என, கூற இயலாது. அப்படியே வருவோர் சோதனை செய்யப்படுகின்றனர்.
சென்னைக்கு அடுத்த பெரியநகரம் மதுரை. இங்கிருந்து 5 மாநிலங்களுக்கு காய்கறிகள்செல்கின்றன. வடமாநிலங்களில் இருந்தும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வருகின்றன. மதுரையில் நோய் அதிகரிக்கிறது என, சிலர் அச்சம் ஏற்படுத்துகின்றனர். மக்கள் பயப்பட வேண்டாம்.
மதுரை மாவட்ட மக்கள் மீது அரசு அக்கறை கொண்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 874 பேர் குணமடைந்துள்ளனர். 40 பேர் வரை இறந்துள்ளனர். இந்த நோய்க்குமருந்து கண்டுபிடிக்காத போதிலும், அதிகளவில் குணப்படுத்தி உள்ளோம். பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் குணமடைந்தோர் அதிகம். இறப்பு விகிதமும் குறைவு. இரவு, பகலின்றி அதிகாரிகள், பணியாளர்கள் உழைக்கின்றனர்.
வீட்டில் இருந்து கொண்டு அரசியல் லாபத்திற்கென யாரோ எழுதிக்கொடுக்கும் மக்கள் நலன் இல்லாத அறிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
சுமார் 2 கோடிக்கு மேற்பட்டகுடும்பங்களுக்கு ரூ. 4,333 கோடியில் நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார். இதை மறைக்க எதிர்க் கட்சி தலைவர் பொய் பிரசாரம் செய்கிறார்.
மதுரையில் நோய் தடுப்புக்கான விரிவாக்க நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப் படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத், பீகார் மற்றும் பிற மாவட்டங் களில் இருந்து வந்துள்ள தமிழக அமைப்பு சாரா தொழிலாளர் களை சோதனை செய்கிறோம்.
கிராமந்தோறும் விஜிலென்சு குழு கண்காணிக்கிறது. நோய் தொற்றின் ஆரம்பநிலையை கண்டறியும் நடவடிக் கை தீவிரமாககப்பட்டுள்ளது. மதுரை மட்டுமின்றி விரைவில் அனைத்து மாவட்டமும் (தமிழகம்) தொற்று இல்லாத மாவட்டமாக உருவாகும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.