சிவகங்கை மாவட்டத்தில்  மேலும் 30 பேருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில்  மேலும் 30 பேருக்கு கரோனா
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.

ஏற்கனவே 320-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சிவகங்கை, மானாமதுரை, ஆவரங்காடு, பாப்பாமடை, கண்டனிப்பட்டி, நடராஜபுரம், எம்.காரைக்குடி, அரண்மனைசிறுவயல், திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in