

தென் மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரில் மதுரை தெற்கு வாசல் சிறப்பு எஸ்ஐ, போக்குவரத்து காவலருக்கு முதன்முதலில் தொற்று உறுதியானது. தொடர்ந்து மீனாட்சி கோயில் தீயணைப்பு நிலைய வீரர், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் மற்றும் தேனி சென்ற திடீர்நகர் காவல் நிலைய காவலர்கள் இருவருக்கும் தொற்று உறுதியானது.
2 நாட்களுக்கு முன் மதுரை காவல் கண்காணிப்பாளர் அலு வலக தனிப்பிரிவு காவலர் ஒரு வருக்கு கரோனா உறுதியானது. இதனால், அங்கு பணியில் இருந்த அனைவருக்கும் எஸ்பி. மணிவண்ணன் உத்தரவின்பேரில் மருத்துவப் பரிசோதனை செய் யப்பட்டதோடு அலுவலகம் முழு வதும் கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.
சென்னையில் காவல் ஆய் வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ள நிலையில், மதுரை நகரில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு பெண் காவலருக்கும், ஆயுதப் படையில் பணியாற்றும் அவரது கணவருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது.
கடந்த இரண்டரை மாதத்தில் மட்டும் மதுரை நகரில் 10 காவல் துறையினருக்கும், தென் மாவட்ட அளவில் தூத்துக்குடி, மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர்கள் உட்பட 25 பேர் வரை நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 9 பேர் குண மடைந்துள்ளனர்.
சென்னையை ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும் பாதுகாப்புடன் பணிபுரிய காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளனர்.
காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறுகையில், மதுரையில் காவல் துறையினருக்கு போதிய முகக்கவசம், கிருமி நாசினி, சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர் பொடி ஆகியன வழங்கி வருகிறோம். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்,
பணி முடிந்து வீடு திரும்பும் போது குளிக்க வேண்டும். தேவையின்றி முகத்தில் கை வைக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.
தேவையின்றி காவல் நிலை யங்களில் யாரையும் விசா ரிக்கக் கூடாது. அவசியமான புகார்களை மட்டுமே விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம். ஏற்கெனவே சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புள்ள காவலர்களுக்கு களப்பணி ஒதுக்காமல், கோயில் போன்ற இடங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி இருந்தால் வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள் ளோம். இது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.