

"பேரிடரை எதிர்கொள்ள மக்களுக்கு முதல்வர் நம்பிக்கை ஊட்டுகிறார். இதை மக்கள் பிரதிநிதிகள் சிதைக்கவேண்டாம். இதுவே அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் மற்றும் பதிலுமாகும்" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பொதுமக்கள், தொழிலாளர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம். முதல்வரின் அறிவுரைகளை செயல்படுத்துவதில் மதுரை மாவட்டம் முதன்மை பெறுகிறது.
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நோய்த் தடுப்பு குறித்து எனக்கு எழுதிய கடிதம் தொடர்பாக ஏற்கெனவே பதிலளித்துள்ளேன். அவருக்கு மீண்டும் பதலளிக்கிறேன்.
மதுரை மாவட்டத்தில் நோய் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொற்று கண்டறிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சோதனைச்சாவடி, ரயில், விமான நிலையங்களில் நோய் தடுப்பு பரிசோதனை தொடர்ந்து நடக்கிறது. கடந்த ஜூன் 1 முதல் 16 வரை சென்னையில் இருந்து வந்த 6, 422 நபர்கள், வெளி நாடுகளில் இருந்து வந்த 1,014, பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என, இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கிராமங் களுக்கு வரும் வெளியூர் நபர்களும் கண்காணித்து பரிசோதனை உட்படுத்தப்படுகின்றனர்.
இது போன்ற தொடர் நடவடிக்கை புள்ளி விவரங்களை மக்கள் பிரதிநிதிகள் தெரிந்து கொள்ளவேண்டும். மக்கள் மீதான நலன் கருதி கேட்பது தவறில்லை. வெளிப் படையாக அரசு செயல்படுகிறது.
கொடுக்கும் செய்திகள் மக்களுக்கு நம்பிக்கை தரவேண்டும். இந்த பேரிடரை உலக பொது சுகாதார அமைப்பே அவசர பிரகடனமாக கருதுகிறது. உலக வரலாற்றில் இது பற்றி கேட்டதும், அறிந்ததும் இல்லை. நோய் தடுக்க, உயிரை பணயம் வைத்து முதல்நிலையில் நின்று பணியாற்றுவோரை பாராட்ட எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை.
குற்றம் சொல்வதும், பீதி, அச்சத்தை ஏற்படுத்துவமே அவர்களின் கடமை. தொற்றில் இருந்து பாதுகாப்புடன் வெளியே வர அனை வருக்கும் கடமை உண்டு. இதில் எதிர்க்கட்சி தலைவருக்கு தார் மீக பொறுப்பு இருக்கவேண்டும்.
இதை தவிர்த்து, அரசியல் காரணத்திற்கென தொடர்ந்து அவதூறு பரப்புகிறார். அவரை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். உலகலாவிய அச் சுறுத்திலில் அனைவரும் கைகோர்த்து நிற்கவேண்டும்.
முதல்வர் உறக்கமின்றி மக்களை மீட்டெடுக்கும் பணியில் அரண் அமைத்து செயல்படுகிறார். அவரது நடவடிக்கைக்கும் தோல் கொடுக்க வேண்டும். முதல்வரின் முடிவுகள் தொலைநோக்கி பார்வையில் உள்ளன.
பேரிடர் நேரத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி, தயார்ப் படுத்தவேண்டும். அரசு நம்பிக்கை ஊட்டுகிறது. எதிர்க் கட்சி தலை வர் சிதைக்கிறார். தாமாக முன்வந்து அரசுக்கு ஒத்து ழைக்கும் இடங்களில் தொற்றில் இருந்து மக்கள் விரைவாக வெளியே வந்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் தினமும் 10 அறிக்கைகள் விடுகிறார். அனைத்தும் அரசு மீது குப்பை, சேற்றை இரைக்கும் வகையில் உள்ளன.
ஒன்றிணைந்து பேரிடரை எதிர்கொள்ள மக்களுக்கு முதல்வர் நம்பிக்கை ஊட்டுகிறார். இதை மக்கள் பிரதிநிதிகள் சிதைக்கவேண்டாம். இதுவே அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் மற்றும் பதிலுமாகும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.