

சென்னை: தமிழகம் முழுவதும் 17 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட 56 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவு: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமையிடத்து இணை ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் (1) செல்வராஜ், உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜி.வனிதா ஆவடி காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிர்வாகப்பிரிவு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்பி கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், தி.நகர் துணை ஆணையர் எஸ்.
குத்தாலிங்கம் சேலம் எஸ்பியாகவும், அடையாறு துணை ஆணையர் ஏ.சி.கார்த்திகேயன் திருவண்ணாமலை எஸ்பியாகவும், பள்ளிக்கரணை துணை ஆணையர் ஆர்.பொன்கார்த்திக் குமார் திருச்சி தலைமையிட துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் எஸ்பி விவேகானந்த சுக்லா கடலூர் எஸ்பியாகவும், விழுப்புரம் எஸ்பி சாய் பிரனீத் திருவள்ளூர் எஸ்பியாவும், கடலூர் எஸ்பி ஜெயகுமார் திண்டுக்கல் எஸ்பியாகவும், திருவண்ணாமலை எஸ்பி டாக்டர் எம்.சுதாகர் வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) பிரிவு எஸ்பியாகவும், மதுரை வடக்கு துணை ஆணையர் எஸ்.மதிவாணன் விழுப்புரம் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சேலம் எஸ்பி கவுதம் கோயல் விருதுநகர் எஸ்பியாகவும், டிஜிபி அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து உதவி ஐஜி அருண் கபிலன் தருமபுரி எஸ்பியாகவும், அரியலூர் எஸ்பி விஸ்வேஷ் பாலசுப்ரிமணியம் சாஸ்திரி திருநெல்வேலி எஸ்பியாவும், விருதுநகர் எஸ்பி என்.நாதா டிஜிபி அலுவலக தலைமையிடத்து உதவி ஐஜியாகவும், சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி எஸ்.செல்வகுமார் அரியலூர் எஸ்பியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் உள்பட 56 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 மாவட்ட எஸ்பி-க்களும் அடங்குவர். இவ்வாறு உள்துறை செயலர் கே.மணிவாசன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.