இந்து தமிழ் செய்தி எதிரொலி: ஆரம்ப சுகாதார நிலைய பல்நோக்கு பணியாளர்களுக்கு  உடனடியாக ஊதியம்  வழங்க ஆட்சியர் உத்தரவு 

இந்து தமிழ் செய்தி எதிரொலி: ஆரம்ப சுகாதார நிலைய பல்நோக்கு பணியாளர்களுக்கு  உடனடியாக ஊதியம்  வழங்க ஆட்சியர் உத்தரவு 
Updated on
1 min read

இந்து தமிழ் செய்தி எதிரொலியால் சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல்நோக்கு பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

தமிழகம் முழுவதும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 2 முதல் 6 வரையிலான தற்காலிக பல்நோக்கு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் துப்புரவு பணி, நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பல்நோக்கு பணியாளர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து இன்று மாலை இந்து தமிழ் ஆன்லைனில் செய்தி வெளியானது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல்நோக்கு பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.அதற்கான நிதியையும் விடுவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in