ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல்படை வீரர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல்படை வீரர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி
Updated on
1 min read


புதுச்சேரியில் மேலும் ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல்படை வீரர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 107 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 60 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதிதாக ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர், ஊர்காவல்படை வீரர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 70 ஆகவும், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 119 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 47 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 2 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘‘புதுச்சேரியில் புதிதாக ஜிப்மர் மருத்துவர்கள் 5 பேர்,

மருத்துவர்களின் உறவினர்கள் 3 பேர், அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டெக்னிஷியன் ஒருவர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநராக உள்ள ஊர்காவல் படை வீரர், புதிய சாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், திலாசுப்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூயிலும், 9 பேர் ஜிப்மர் மருத்தவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது வரை 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 119 ஆக உள்ளது.

அதுபோல் தற்போது 2 பேர் குணமடைந்து சென்றுள்ள நிலையில், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8118 பேருக்கு கரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. அதில் 7968 பேருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. 32 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது’’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in